நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்டில் நடந்த தங்களின் திருமணம் தொடர்பான வீடியோவை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் வெளியிட இருவரும் முடிவு செய்தனர். அதற்காக பெரிய தொகையும் பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது 'நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற பெயரில் அந்த ஆவணப்படம் வெளியாகவுள்ளது. இத்தகவலை நெட்பிளிக்ஸ் உறுதி செய்துள்ளது.