ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் பணம் எடுக்க வரும் முதியவர்களை குறி வைத்து சரவணகுமார் என்பவர் தொடர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். உதவி செய்வது போல நடித்து போலி கார்டை மாற்றி கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.