டிஜிட்டல் யுகம் வளர்வதற்கு முன்பு மக்களை இணைக்கும் தொடர்பு கருவியாக விளங்கியது கடிதங்கள். செல்போன், தொலைபேசி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்வதற்கு முன்னர் தகவல் தொடர்புகளை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றிய அஞ்சல் சேவைகளை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ம் தேதி ‘உலக அஞ்சல் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த யாருக்காவது கடிதம் எழுதி அதை அஞ்சலில் அனுப்புங்கள்.