ஸ்கூட்டி மீது லாரி மோதிய விபத்து

84பார்த்தது
ஸ்கூட்டி மீது லாரி மோதிய விபத்து
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (46). இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டி வாகனத்தில் சித்தலவாய் கடைக்கு சென்று விட்டு திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் சஞ்சய் மீது மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு.

தொடர்புடைய செய்தி