கரூர்: தங்கக் காப்பில் ஜொலிக்கும் விநாயகர்

1876பார்த்தது
கரூர்: தங்கக் காப்பில் ஜொலிக்கும் விநாயகர்
புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் & தங்க காப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று 2024 ஆம் ஆண்டு பொது வருடம் பிறந்ததை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கரூர் சின்னாண்டாங் கோயில் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தங்க காப்பு அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலேயே சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியால் அபிஷேகம் நடத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட கற்பக விநாயகருக்கு தங்கக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

தங்கக்காப்பு செய்யப்பட்ட விநாயகரை தரிசிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டனர். கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கடந்த காலங்களைப் போல அல்லாமல், நடப்பாண்டு நோய், நொடிகள் பாதிக்காத வகையில் நல்லதொரு ஆண்டாக அமைய வேண்டும் என மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.

புத்தாண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி