தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த பி. ஆர். பாண்டியன்

62பார்த்தது
கர்நாடகாவில் உரிய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத் தரக் கோரியும் மேகத்தாட்டு அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரியும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் அருகே பேட்டியளித்த பி. ஆர். பாண்டியன், இந்தியா முழுவதும் விவசாயிகளின் எதிர்ப்பு எழுந்ததால் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு பெரும்பான்மை இல்லாமல் மூன்றாவது முறையாக, ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம்.

விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் வாய்வு திட்டத்தை நிறைவேற்ற கையொப்பமிட்டவர் தான் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அதை டெல்டா விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி