டெல்லியின் மங்கோல்பூரில் கடந்த ஜூன் 3ம் தேதி கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. கணவரை இழந்த தாயும், தங்கையும் சொத்துக்காக மகன்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அமித் ரதி, ஷரத் ரதி, நீரஜ், சுமன், சோனு ஆகியோர் மீது ஒரு வாரம் ஆகியும் கூட போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதன் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.