டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் 2017ல் வெளியான 'தப்பாட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றை பகிர்ந்தார். ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது. தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை, மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.
இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் கூறுகையில், "சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பிரபலமாக்கிய எலான் மஸ்க்கிற்கு நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.