கேரளாவில் தற்போது காலரா தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே வெஸ்ட் நைல் காய்ச்சல், அமீபா மூளைக் காய்ச்சல், டெங்கு, எலி காய்ச்சல் ஆகிய நோய் தொற்றுகள் பரவி வருகிறது. இந்த நிலையில் காலராவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அமீபா மூளை காய்ச்சலுக்கு சமீபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொற்றைத் தடுக்க கேரள சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.