புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் கதவனை- புகழூரில் வேல்முருகன் விளக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற குழுவினர் கரூர் மாவட்டத்தில் புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406 கோடி மதிப்பில் கட்டப்படும் கதவணையை ஆய்வினை மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த
வேல்முருகன், புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டோம்.
இந்தியாவிலேயே புதிய யுக்தியை பயன்படுத்தி இந்த கதவணை கட்டப்பட்டு வருவதாலும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்த குழு அறிவுறுத்தியுள்ளது. திட்டமதிப்பீட்டை கூடுதலாக கட்டுமானப் பணிக்கு தேவைப்படுவதால் அதற்காக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதை காரணம் காட்டி, பணிகளை நிறுத்தக் கூடாது என ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிடபட்டுள்ளது.
அணையை தரமாகவும், அணையில் தண்ணீரை முழுக் கொள்ளளவை தேக்கி வைத்து ஷட்டர்களின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மேட்டூர் அணை மற்றும் முல்லைப் பெரியார் அணை போன்று உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.