புகழுூர்-2 இடங்களில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

51பார்த்தது
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, புஞ்சை தோட்டக்குறிச்சி மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதியில் பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக கட்சி துவங்கிய 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பவள விழா கொண்டாட கட்சி நிர்வாக முடிவெடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கரூர் , அரவக்குறிச்சி , கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நேற்று இரவு கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தளவாபாளையம் பேரூர் கழக செயலாளர் முரளி ராஜா தலைமையிலும், வேலைதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புகலூர் நகர்மன்ற தலைவர் குணசேகரன் தலைமையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டு, கட்சியின் பவள விழாவை எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என கட்சியினரிடையே எழுச்சி உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி