வங்கி அருகே நின்றிருந்த பெண் மீது மீது கார் மோதி விபத்து.

74பார்த்தது
தென்னிலையில் வங்கி அருகே நின்றிருந்த பெண் மீது மீது கார் மோதி விபத்து பெண் படுகாயம்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தென்னிலை தெற்கு, சாலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் மனைவி சித்ரா வயது 47.

இவர் ஏப்ரல் 2-ம் தேதி காலை 7: 45 மணி அளவில், தென்னிலை எஸ்பிஐ வங்கி அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நடராஜன் வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் நின்று கொண்டிருந்த சித்ரா மீது மோது விபத்து ஏற்பட்டது.

உடனடியாக சித்ராவை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் அறிந்த செந்தில்குமார் இது தொடர்பாக அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி