*உணர்ச்சியே இல்லாதவர்க்கு உயிர் இருந்தும் பயனில்லை. உணர்ச்சி வயப்படுபவருக்கு உயர்வு இருந்தும் பெருமையில்லை.
*மேகங்களே, சூரியனை மறைக்கி
றீர்கள். மறந்து விடாதீர்கள் காற்று வீசினால், கலைந்தும், கரைந்தும், மறைந்தும் போவீர்கள்.
*ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாக கூவி வந்தாலும், மயிலாக ஆடி வந்தாலும், மயங்கிடோம். அன்னை தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.
*மனிதனை பண்படுத்துவதற்கு பயன்படாத வரையில், மதம் என்பது யானைக்கு வரும் ஒரு நோயை குறிப்பிடுவதாகும்.