கர்நாடகா அமைச்சர் ராஜினாமா!

68பார்த்தது
கர்நாடகா அமைச்சர் ராஜினாமா!
கர்நாடகாவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நாகேந்திராவிற்கு தொடர்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நாகேந்திராவை ராஜினாமா செய்ய வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். வழக்கில் நிரபராதியான பிறகு மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்வதாகவும் சித்தராமையா உறுதியளித்தவுடன் நாகேந்திரன் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.