25-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், 25-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தில், "ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த நமது வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுகிறோம். நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்" என பதிவிட்டுள்ளார்.