2 நாட்களாக லாபத்தை அள்ளித் தந்த பங்கு

52பார்த்தது
2 நாட்களாக லாபத்தை அள்ளித் தந்த பங்கு
சஸ்லான் எனர்ஜி ஒரு மிட்கேப் பங்கு ஆகும். தொடர் நஷ்டத்தில் இருந்த புனேவைச் சேர்ந்த காற்றாலை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடர்ந்து 2 நாட்களாக இந்த பங்கு அப்பர் சர்க்யூட்டில் உள்ளது. வியாழன் அன்று பங்கு விலை 5 சதவீதம் உயர்ந்து ரூ.55.40 ஆக இருந்தது. இரண்டு நாள் லாபம் 10 சதவீதம்.
நிறுவனம் வலுவான காலாண்டு முடிவுகளை அறிவித்த நிலையில், ஏற்றத்தில் உள்ளது. இந்நிறுவனம் இந்த ஆண்டு ரூ.2,968.81 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி