செல்போன் கொடுக்காததால் 13 வயது சிறுவன் தற்கொலை

61பார்த்தது
செல்போன் கொடுக்காததால் 13 வயது சிறுவன் தற்கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துருவ் என்ற 13 வயது சிறுவன், செல்போன் கொடுக்காத விரக்தியில், தனது 9 வயது தங்கையின் கண் முன்னே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். செல்போனுக்கு அடிமையான துருவை, பெற்றோர் நாள்தோறும் கண்டித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று துருவ் செல்போன் கேட்க, அதனை கொடுக்காமல் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். பள்ளி முடிந்து தங்கையுடன் வீட்டிற்கு திரும்பிய துருவ், பெற்றோர் செல்போன் தராத விரக்தியில், தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி