காரில் சென்று பெண்களை அச்சுறுத்திய 5 இளைஞர்கள் கைது

77பார்த்தது
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருந்திய காரில் விரட்டிச் சென்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கல்லூரி மாணவர் கைதான நிலையில் தற்போது 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில், 7 இளைஞர்கள் கொண்ட கும்பல் காரில் துரத்திச் சென்று அச்சுறுத்தியது தெரியவந்தது. கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி