உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த காயங்களுடன் சிறுமி இருந்ததால், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.