இலங்கையிலிருந்து நேற்று முன்தினம் (ஜன., 29) மதுரைக்கு ஸ்ரீலங்கன் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 2 பெண்கள், 13 இந்தோ சீனிஸ் பாக்ஸ் ஆமைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாவித்திரி (36), திருப்பூரைச் சேர்ந்த உஷா (31) என தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த இருவரையும் கைது செய்த சுங்கத்துறையினர் ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.