சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் அருகே வசிக்கும் இளைஞர்களுடன் ஏற்பட்ட முன்பகையே கொலைக்கு காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை நேற்று இந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணுக்கும் அரிவாள் வெட்டுக்கு ஆளானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.