களியக்காவிளை: மரியகிரி கல்லூரியில் போதை எதிர்ப்பு பேரணி

70பார்த்தது
களியக்காவிளை: மரியகிரி கல்லூரியில் போதை எதிர்ப்பு பேரணி
களியக்காவிளை மரியகிரி கல்லூரி என்சிசி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் துவக்கி வைத்தார். தலைமை வகித்தவர் அருட்பணியாளர் அருள்தாஸ். முதல்வர் பீட்டர் அமலதாஸ் முன்னிலை வகித்தார். போதைப்பொருள் குறித்த ஒரு விழிப்புணர்வு நாடகத்தை மாணவர்கள் நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் போதைப்பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியானது மரியகிரி, சூரியகோடு, தூத்தூர், ஏழுதேசப்பற்று மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சென்று கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. 11 தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி அதிகாரி சூர்யபிரகாஷ் ரெட்டி பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். பேரணியின் போது பேசிய டிஎஸ்பி, மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து எங்காவது கவனித்தால் 10581 என்ற எண்ணிலோ, 8122223319 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பேரணியின் போது மாணவர்கள் கிராமங்களில் விநியோகம் செய்தனர். பேரணியின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி