அருமனை அருகே மேல்புறத்தை அடுத்த வெங்கனம்கோடு பகுதி சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவர் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
கடந்த 14 ஆம் தேதி இரவு பணி முடிந்து பட்டறை பூட்டி சென்றார். நேற்று(டிச.16) காலை 10 மணி அளவில் பட்டறை திறக்க பத்மநாபபிள்ளை வந்தார். அப்போது கடை பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கும் 4 கிராம் தங்க மோதிரங்கள் மற்றும் 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. இது பற்றி அவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.