திருவட்டாறு: இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
திருவட்டாறு: இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
குமரியின் புராதன நகரமான திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் நிலத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் வரையப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவில் படம் அழிக்கப்பட்டது. இதை கண்டித்தும், பஸ் நிலையத்திற்கு ஆதிகேசவ பெருமாள் பெயர் சூட்ட கோரியும் இந்து முன்னணி சார்பில் நேற்று (பிப்.2) மாலை ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து அழிக்கப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவில் படம் மீண்டும் அதே இடத்தில் வரையப்பட்டது. இந்த நிலையில் பஸ் நிலையத்திற்கு ஆதிகேசவ பெருமாள் பெயர் சூட்ட வலியுறுத்தி நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்து முன்னணி திருவட்டார் ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், மாவட்ட ஆலோசகர் மிசா சோமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி