சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென லாரியின் இருந்த பொருட்களில் தீ பற்றியது. இதனை கவனித்த ஓட்டுநரும், மற்றொருவரும் வேகமாக கீழே இறங்கினர். தொடர்ந்து, அருகில் இருந்த தண்ணீர் வாலியை எடுத்துக்கொண்டு தீயை அணைக்க சாலையில் ஓடினர். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.