ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 2024 தீபாவளியை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்து தமிழகத்தில் அதிக அளவில் பால் உபபொருட்கள் விற்பனை செய்ததில் மதுரை ஒன்றியமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த (ஏப்ரல் 24 முதல் டிசம்பர் 24) வரையான 9 மாதத்தில் ரூ.14.4 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் வழங்கும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.