கறிவேப்பிலையை பலரும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாமிரம், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. தினமும் காலை வெறும் வயிற்றில் 5 கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது பல நோய்களை தடுக்கும். கண்பார்வையை மேம்படுத்தும், சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும், செரிமானத்தை பலப்படுத்தும், முடியை கருமையாக்கும், மலச்சிக்கலை அடியோடு நீக்கும். இதயத்திற்கும் ஆரோக்கியம் தரும்.