தமிழக வெற்றிக் கழகத்தில், முதற்கட்டமாக கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான புதிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியலை விஜய் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்களின் 2ஆவது பட்டியலை, விஜய் ஜன.29 வெளியிட்டார். இந்நிலையில், புதிய மாவட்ட செயலாளர்களின் 3ஆவது பட்டியல் இன்று (ஜன.31) வெளியிட உள்ள நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.