சென்னை அடுத்த பல்லாவரத்தில், பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதி நகரில் வசித்த பேராசிரியை தனலட்சுமியின் வீட்டில் இருந்து புகை வந்ததாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பார்த்தபோது, தனலட்சுமி சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து, ஏசியால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.