நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரியில் பழமை வாய்ந்த கனக மூலம் காய்கறி சந்தை உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையான இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளம் பேர் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.
இந்த சந்தையில் தள்ளுவண்டியில் வைத்து பழம், கருவாடு விற்பனை செய்வதற்கு மாநகராட்சி அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (29-ம் தேதி) மாலை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டி கடைகளை அகற்றினர். திடீரென இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறினர். மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தனர்.