குளச்சல் அருகே குறும்பனையில் நேற்று இரவு 10: 30மணி அளவில் சப்- இன்ஸ்பெக்டர் தேவராஜ் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் இன்னிசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த தேவராஜ் இரவு 10 மணிக்கு மேல் இன்னிசை கச்சேரி நடத்தக் கூடாது என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி இன்னிசை கச்சேரி நடத்தியதாக ஆலய பாதிரியார் ஸ்டீபன், ஊர் துணைத் தலைவர் வில்பிரட், செயலாளர் சகாயபுத்திரன், துணைச் செயலாளர் சீலா, ஒலி அமைப்பு உரிமையாளர் ஆகியோர்கள் மீது சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்மந்தபட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.