லாரிகளால் 6 பேர் உயிரிழப்பு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்

1904பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, - 
      கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிமவளங்கள் கிடைப்பதில்லை. கனிமவள டாரஸ் லாரிகள் மோதி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோதங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்.
     கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
      ஒரு மாநிலத்தின் ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால்இது போன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம் ஆர் காந்தி எம் எல் ஏ உட்பட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி