தொடரும் கனமழை - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

68பார்த்தது
தொடரும் கனமழை - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆகாயகங்கை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஆகாயகங்கை அருவி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளுக்குச் செல்ல இன்று (மே 18) முதல் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி அருவிகளுக்குச் சென்றால் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி