யானை கஜராஜன் பட்டாம்பி கர்ணன் மாரடைப்பால் மரணம்

70பார்த்தது
யானை கஜராஜன் பட்டாம்பி கர்ணன் மாரடைப்பால் மரணம்
கேரளாவின் கோட்டயம் அருகே வேச்சூரில் யானை கஜராஜன் பட்டாம்பி கர்ணன் உயிரிழந்தது. 45 வயதான கர்ணன் ஒரு மாதத்திற்கு முன்பு வாத சிகிச்சைக்காக வேச்சூருக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இன்று (மே 18) திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அதிகாலை மயங்கி விழுந்து உயிரிழந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் கேரளாவில் யானை பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.