குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டி ரத்து

71பார்த்தது
குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டி ரத்து
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்காக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு ரூபாய் 96.10 கோடி ஜிஎஸ்டி விதித்து மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து குடிநீர் வழங்கல் வாரியம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 96.10 கோடி ஜிஎஸ்டி விதித்து மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி