குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் கொளுத்திய நிலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று மலையோர பகுதிகளான பாலமோர் பெருஞ்சாணி, புத்தன் அணை, சுருளோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 9. 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. பேச்ரிப்பாளை அணை நீர் மட்டம் 45. 17 அடி ஆகும். அணைக்கு 434 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 535 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62 அடியாகவும், அணைக்கு 298 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணை மூடப்பட்டிருந்தது. இது போன்று குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும், குமரி - கேரளா எல்லை பகுதிகளிலும் மழை பெய்தது.