மனைவி கோபித்து சென்றதால் மீன்பிடி தொழிலாளி தற்கொலை

1540பார்த்தது
மனைவி கோபித்து சென்றதால் மீன்பிடி தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே குறும்பனை பாத்திமா தெரு பகுதியை சேர்ந்தவர் சஜின் (32). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு  திருமணமாகி பிறந்து 45 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது.

     கடைசியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆழ்கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த  நான்கு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். அப்போது தாய் வீட்டில் இருந்த மனைவியையும், குழந்தையையும்  அழைத்து வீட்டிற்கு வந்துள்ளார்

     இந்நிலையில் நேற்று முன்தினம்  இருவருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வாக்குவாதம் முற்றிய  நிலையில், மனைவி சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர்.   சஜின் குழந்தையை பார்க்க வேண்டும் எனவே வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

         இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு சஜின் படுத்த அறையில் இருந்து சத்தம் கேட்டதால் பெற்றோர் ஓடி சென்று பார்த்தனர். அப்போது ஃபேனில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, சஜின் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

       இதனை அடுத்து உடலை மீட்டு,   பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்து கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி