அணை நீர் திறப்பு: திற்பரப்பில் குளிக்க அனுமதி மறுப்பு

64பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிதமான அளவில் பெய்துவந்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இதேபோல மாவட்டத்தில் பல இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தற்போது  மாலையில் தண்ணீா் வரத்து திடீரென அதிகரித்தது. இதையடுத்து நேற்று அருவியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

    இதற்கிடையில் நேற்று மாலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இரவும் மழை நீடித்ததால் பேச்சிப்பாறை அணையில் நீர்வரத்து அதிகாரித்தது.   இதனால் இன்று பேச்சிப்பாறை  அணையில் இருந்து 2 ஆயிரம்  கன அடி தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்புத்தது.

     இதை அடுத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியிலும் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். ஆனால் அருவியில் அதிகமாக தண்ணீர் கொட்டுவதால சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் திற்பரப்பிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்புடைய செய்தி