மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டுள்ளதாக குற்றசாட்டை முன்வைத்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று மாலை கருங்கல் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ தலைமை தாங்கி துவக்கி வைத்து, கட்டண உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், கிள்ளியூர் வட்டாரத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜோபி உட்பட ஏராளமானார் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.