அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணை இன்று (டிச.28) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், “இந்த விவகாரம் தொர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிடவில்லை” என அரசுத் தலைமை வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “IPC-ல் இருந்து BNS சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டது. இதற்கு NIC-தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.