என்னை அரசியல்வாதியாக பார்க்காதீர்கள்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனாக பார்த்தால், என் செயலை யாரும் என் செயலை கேலி செய்யமாட்டார்கள் என சாட்டையடி போராட்டத்தை விமர்சித்த மற்ற கட்சியினருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "இது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய கோபம். சிஸ்டம் பெயில் ஆகி விட்டது. சிஸ்டம் பெயில் ஆகும்போது யாரிடம் போய் சொல்வீர்கள்" என்று கூறியுள்ளார்.