பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பெட்ரோல் மீதான வரியை 2.44%மும், டீசல் மீதான வரியை 2.57%மும் உயர்த்த துணை நிலைஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது, புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.26-க்கும், டீசல் ரூ.84.48-க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட் வரி உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.