தெலங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் செல்வதற்காக ஹெல்மெட் அணிந்துள்ளார். அந்த ஹெல்மெட்டில் ஒரு சிறிய நல்ல பாம்பு குட்டி மறைந்திருந்துள்ளது. பாம்பு இருப்பதை உணராத அந்த நபர் வழக்கம் போல ஹெல்மெட் அணிந்துள்ளார். ஆனால், ஹெல்மெட்டில் இருந்த பாம்பு அந்த நபரின் தலையில் கடித்துள்ளது. பின்னர் அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் அசையாமல், விறைத்து போனது போல் அமர்ந்துக் கொண்டிருக்கிறார். போலீசாரும் பொதுமக்களும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.