சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பத்தனம்திட்டாவில் தேவஸ்வம் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.