ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் நடந்த தவறுதலான தாக்குதலால் கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ரஷ்யாவை குறிவைத்து உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியபோது ஏற்பட்ட சிக்கல்களே இந்த துயரத்திற்கு காரணம் என புடின் விளக்கம் அளித்துள்ளார்.