நாங்களும் திருமணத்திற்கு செல்கிறோம், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி என்றால் அவர்களுடன் எங்களுக்கும் தொடர்பு என அர்த்தமா? யாருடன் யார் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துள்ளதாக கூறப்பட்ட வாதத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.