வித்தியாசமான சவால்களை எப்போதும் விரும்புவதாக பும்ரா தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸின் முதல் 2 ஓவர்களில், 6-7 முறை கான்ஸ்டாஸ் விக்கெட் கிடைப்பது போன்ற சூழல் இருந்ததாகவும், ஆனால், கிரிக்கெட்டில் சில நேரங்களில் இப்படி நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்வேன் எனவும், 2ஆவது இன்னிங்ஸிலும் அவரது பவுலிங்கில் அதிரடி காட்டுவேன் எனவும் கான்ஸ்டாஸ் தெரிவித்தார்.