அண்ணா பல்கலை. பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சமடைய வேண்டாம் என ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலை. மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு செய்த பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பல்கலை. பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது. மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலை. நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.