மத்திய தகவல் தொடர்புத் துறை 19,000 BSNL ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2-வது VRS திட்டத்தை செயல்படுத்த BSNL 1500 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளது. இந்த VRS சுற்றின் மூலம் சுமார் 18,000 முதல் 19,000 பணியாளர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட முதல் VRS திட்டத்தில் 93,000 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.