ஆடி அமாவாசை: குழித்துறையில் இன்று முதலே பலி தர்ப்பணம்

73பார்த்தது
குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை ஒட்டி வாவு பலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 99 ஆவது வாவு பலி பொருட்காட்சி கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

      இந்த பொருள்காட்சியின் முக்கிய தினமான வாவு பலி எனப்படும் ஆடி அமாவாசை 4-ம் தேதி (நாளை )  அனுஷ்டிக்கப்படுகிறது.  
      இந்த நிலையில் இந்த ஆண்டு இன்று 3-ம் தேதி  மாலை 4. 52 மணிக்கு ஆடி மாத அமாவாசை ஆரம்பம் ஆகிறது. இதை ஒட்டி இன்று இரவு தங்கல்  இருப்பதால், அன்றைய தினமே பலி தர்ப்பணம் நடத்த வேண்டும் என கேரளாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நேற்று பலி தர்ப்பணம் நடைபெற்றது.

      இதனால் கேரளாவை ஒட்டி உள்ள குழித்துறையில் இன்று பலி தர்ப்பணம் நிகழ்ச்சிக்கு  கேரளாவை சேர்ந்த ஏராளமானவர் குவிந்து, முன்னோர்கள் நினைத்து பலி தர்ப்பணம் செய்தனர்.

     அதே வேளையில் தமிழகத்தில் முழு அமாவாசை நாளை - 4-ம் தேதி என்பதால், நாளையும் பலி தர்ப்பணம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாளை 4-ம் தேதி பழி தர்ப்பணம் செய்ய உள்ளனர். இதனால் குழித்துறை மகாதேவர் கோயில் அருகே இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு பலி தர்ப்பணத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி